சித்ரா பவுர்ணமி கோவில்களில் வழிபாடு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் மயிலை மலை மயில்வாகன பாலமுருகர் கோவிலில் ரததோற்சவ, 45-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் விநாயகர் பூஜையும், கொடியேற்று விழாவும் நடந்தது. அன்று மதியம் கங்கை நீராட்டு விழா, காவடி ஊர்வலம், முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், பொங்கல் இடுதல், அபிஷேக பூஜையும் , ரத ஊர்வலமும், காவடி, கரகாட்டம், வானவேடிக்கை நடந்தது.



*கந்திகுப்பம் அருகே உள்ள வாத்தியார் கொட்டாய் சீனிவாச பெருமாள் கோவிலில், 49ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில், சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றp.தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. பர்கூர் காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமர்சையாக நடந்தது.
* கே.ஆர்.பி., அணை அருகில் உள்ள சின்னமுத்துார் கிராம தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள திருமுருகன் கோவிலில், சித்திரை பவுர்ணமியையொட்டி, கோ பூஜை, ஐங்கரன் வேள்வி ஆகியவை நடந்தது.

Advertisement