நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் :சேலம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, கிழக்கு கோட்டத்தில், நாளை (14ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை உடையாப்பட்டி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்குகிறார். கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம்.
இத்தகவலை, கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
* சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்பரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்ககிரி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (14ம் தேதி) காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.