'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'

புதுடில்லி : 'இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் தலைவர் ஆர்.பி.குப்தாவை மத்திய அரசு பதவி நீக்கியதால், அதானி மீதான ஊழலை மறைக்க முடியாது' என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:
பொதுத்துறை நிறுவனமான எஸ்.இ.சி.ஐ., எனப்படும் இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
இதற்காக அரசு அதிகாரிகளுக்கு 2,029 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, எஸ்.இ.சி.ஐ., மீது, கடந்த 2024 நவம்பர் 20ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த 2024 டிசம்பரில் எஸ்.இ.சி.ஐ., மின்சார டெண்டர்களை வழங்கும் முறையை மாற்றியது.
இது அவர்களின் ஊழலை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது-. தற்போது, எஸ்.இ.சி.ஐ.,யின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான குப்தாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அதானியின் ஊழலை மறைத்துவிட முடியாது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட எஸ்.இ.சி.ஐ., எனப்படும் 'இந்திய சூரிய ஆற்றல் கழகம்' முன்னணி 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 1987ம் ஆண்டு குஜராத் ஐ.ஏ.எஸ்., கேடரை சேர்ந்த குப்தா, கடந்த ஜூன் 15, 2023ல், எஸ்.இ.சி.ஐ.,யின் தலைமை பதவிக்கு இரண்டாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். குப்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவதற்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கத்துக்கான காரணம் எதையும் அரசு குறிப்பிடவில்லை.
மேலும்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
" நீங்கள் எங்க ஹீரோ அங்கிள் " - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்