சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாகசாலை பூஜை, சித்தர் பீடத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

அன்னதானம், இலவச அக்குபஞ்சர், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. தயாளன் சுவாமி துவக்கி வைத்தார். அறங்காவலர் மாமல்லன் கார்த்திக், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாக அறங்காவலர் விஜயபாஸ்கர் வரவேற்றார்.

டாக்டர் லிங்குசெல்வி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.

Advertisement