தமிழகத்தில் உள்ள அகதிகள் இலங்கை செல்ல விருப்பம்
ராமேஸ்வரம் : இலங்கையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர்.
இலங்கையில் 1984 முதல் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் தீவிரமடைந்ததால் ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி வந்தனர். தற்போது தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இதில் மண்டபம் முகாமில் மட்டும் 1500 பேர் உள்ளனர். இவர்களுக்கு வீடுகள், கழிப்பறை வசதியின்றி சேதமடைந்த வீடுகளில் சுகாரதாரக்கேடுடன் இவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது 190 குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் கட்டப்படுகிறது.
இதற்கிடையில் கொரோனா தாக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2023 முதல் 2024 டிச., வரை 320 அகதிகள் வந்தனர். இவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் முகாமில் தங்க வைத்து உணவு வழங்கப்படுகிறது. இதனால் குடும்பச்செலவுக்கு பணமின்றி இவர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இவர்களுடன் ஏற்கனவே முகாமில் தங்கியுள்ள பலரும் போதிய வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் மண்டபம் முகாமில் உள்ள 300 அகதிகள் தாயகம் செல்ல சென்னையில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரிடம் விருப்ப மனு அளித்துள்ளனர். அரசு விதிமுறைப்படி விரைந்து செல்ல இலங்கை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகதிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
-
இன்று ( மே 14 )மின்தடை
-
தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் பாராட்டு; குறைதீர் கூட்டத்தில் பெருமிதம்
-
குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்
-
கவர்னர், அமைச்சர் டில்லியில் முகாம் புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு
-
அதிக மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க செயின்; முத்தியால்பேட்டை காங்., பொறுப்பாளர் அறிவிப்பு