தொல்காப்பியர் பிறந்த நாள் விழா 

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில், தமிழ் இலக்கண தந்தை தொல்காப்பியர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.

மொழியியல் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு நிறுவன அரங்கில் நடந்த விழாவில், சபாநாயகர் செல்வம், தொல்காப்பியர் குறித்த கவிதை தொகுப்பு நுாலை வெளியிட்டார்.விழாவில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசி, சிறப்பாக கவிதை படைத்த செந்தில்குமரன் உள்ளிட்ட கவிஞர்களுக்கு 'தொல்காப்பியச் சுடர்' விருது வழங்கினார்.

பேரவை தலைவர் நெய்தல் நாடன், கவிஞர்கள் கடவூர் மணிமாறன், சிந்தைவாசன், பாவலர் மணி, முன்னாள் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement