பைக் திருடியவர் கைது

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் பைக் திருட்டு நடந்து வந்தது. நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

நேற்று மடுகரையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி கொரத்தி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ், 36, என்பதும், அவர் ஒட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.

இதேபோல் கரியமாணிக்கம் சுடுகாட்டு பகுதியில் நிறுத்தி இருந்த பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 1 லட்சம் மதிப்பிலான இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர், மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement