முத்தரையர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

புதுச்சேரி : முத்தரையர்பாளையம் முத்தரையர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

பள்ளியளவில் மாணவி ஆர்த்தி 581 மதிப்பெண்பெற்று முதலிடம், மாணவர் சண்முகநாதன் 571 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சந்தியா 566 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

பள்ளியில் தேர்வு எழுதிய 92 பேரும், தேர்ச்சி பெற்றனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 52 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளியவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் முத்துராமன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அவர், கூறுகையில் 'ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள் பயிலும் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைக்கிறோம். பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பின் சேர்க்கையில் கட்டண சலுகை அளிக்கப்படும். வெற்றிக்கு காரணமான ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார்.

Advertisement