இன்றைய நிகழ்ச்சி/ மே 14

கோயில்

சித்திரைத் திருவிழா - - மோகினி அவதாரத்தில் எழுந்தருளுதல்: ராமராயர் மண்டபம், மதுரை, காலை 6:00 மணி, திருமஞ்சனம்: ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம், இரவு 11:00 மணி.

கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, பல்லக்கில் வீதியுலா, காலை 7:00 மணி, சேஷ வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, 2ம் கால யாகசாலை பூஜை, காலை 6:00 மணி, கும்பாபிஷேகம் காலை: 9:15 மணி, பிரசாதம் விநியோகம், காலை 11:00 மணி.

அன்னை பாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி செய்பவர்: பாதிரியார் செபாஸ்டியன் ஜெரோம், மாலை 6:00 மணி.

அனுஷ விழா, குரு மகிமை என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு, பேசுபவர்: எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

திருப்பரங்குன்றம், வலையங்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி: தாசில்தார் அலுவலகம், திருப்பரங்குன்றம், பங்கேற்பு: தாசில்தார் கவிதா, காலை 10:00 மணி.

ராஜ் விசுவல் ஆர்ட்ஸின் தனி ஆவர்த்தனம் - நாடகம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

சுப்பையா சுவாமி 50வது குருபூஜை: தங்கவேல் ஜீவ சமாதி மடம், ஆரப்பாளையம், மதுரை, காலை 9:00 மணி.

பள்ளி, கல்லுாரிகளுக்கான கோடை கால படிப்பிடை பயிற்சி - தகவல் தொடர்பு திறன், பொது அறிவு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: கல்வியாளர் ஷீலா கிருஷ்ணன், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: விவேகானந்தா கல்லுாரி, மடோனா கல்லுாரி, பாத்திமா கல்லுாரி, காலை 10:30 மணி.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் - வேடமிட்டு கதை சொல்லுதல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டி திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மகால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.

Advertisement