மே 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். வேலைதேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.gov.inல் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப கார்டு, ஆதார், போட்டோவுடன் அன்று காலை 10:00 மணிக்கு மதுரை கே.புதுாரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும்.

தனியார் நிறுவனத்தில் பணிவாய்ப்பு கிடைத்தாலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு பாதிப்பு வராது என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement