தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

சிவகங்கை :சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 16 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

அன்று காலை 10:30 மணிக்கு நடக்கும் முகாமில் தனியார் துறையினர் பங்கேற்கின்றனர். வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பயன்பெறலாம். மேலும் இலவச திறன் பயிற்சி விண்ணப்பம், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறும் விண்ணப்பம் வழங்கப்படும். முகாமில் பங்கேற்க விரும்புவோர் உரிய கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அட்டை, ஆதார் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

Advertisement