நாகம்மாள் கோயில் விழா

மேலுார், : கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாவிளக்கு ஏற்றினர்.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ( மே 14 ) அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.

Advertisement