சாதித்த சங்கர் பொன்னர் பள்ளி

தொப்பம்பட்டி,: பழநி அருகே தும்பலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி நசீரா 600 க்கு 586 பெற்றார். இவரைத் தொடர்ந்து ஜீவிதா 581, கவிராஜ், அஷ்ரத் ஷஹ்நாஸ் இருவரும் 576 பெற்றுள்ளனர். 500க்கு மேல் 69 பேர் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ பாராட்டினர்.

Advertisement