பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:சிவகங்கை, மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இன்று (மே 14) சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி கருத்தரங்கு கூடத்தில் நடைபெறும்.
மே 15 அன்று காளையார் கோவில், இளையான்குடி மாணவர்களுக்கு காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும், மே 16 அன்று திருப்புவனம் மாணவர்களுக்கு வேலம்மாள் மெட்ரிக் பள்ளியிலும், மே 20ம் தேதி சிங்கம்புணரி, எஸ்.புதுார் மாணவர்களுக்கு சிங்கம்புணரி எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நடைபெறும்.
மே 21 அன்று திருப்புத்துார் பாபா மெட்ரிக் பள்ளியில் அந்த வட்டார மாணவர்களுக்கும் நடக்கும். மே 22 தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல் மாணவர்களுக்கு காரைக்குடி அழகப்பா பி.எட்., கல்லுாரியிலும் காலை 9:30 முதல் மதியம் 1:00 மணிவரை நடைபெறும்.
இந்த முகாமில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி, தமிழ்புதல்வன், புதுமை பெண், பாலிடெனிக், கல்லுாரி, பொறியியல், நர்சிங் கல்லுாரி சார்பாக விளக்க கண்காட்சி இடம் பெறும், என்றார்.
மேலும்
-
துருக்கி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது ஜேஎன்யு
-
சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்