ஓம்சக்தி சேகர் இல்ல திருமண விழா

புதுச்சேரி,: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாநில செயலாளரும், ஓம்சக்தி குழும தலைவருமான ஓம்சக்தி சேகரின் இல்லத் திருமண விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.

ஓம்சக்தி சேகரின் இளைய மைத்துனர், புதுச்சேரி ஓம்சக்தி பாரத் காஸ் பொறுப்பாளர் சுந்தர் - விஜய மகாலட்சுமி இவர்களின் மகள் தமிழ் அருவி, செங்கல்பட்டு மாவட்டம் நரேந்திரன் - தேன்மொழி இவர்களின் மகன் அரவிந்த் ஆகியோருக்கு புதுச்சேரி ஆனந்தா திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். விழாவில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணகுமார், புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் சபாநாயகர் சபாபதி, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், சம்பத், பாஸ்கர், ராமலிங்கம், சிவசங்கர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சிவக்குமார், தியாகராஜன், முன்னாள் எம்.பி., ராமதாஸ், முன்னாள் பா.ஜ., தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உட்பட திரளானோர் மணமக்களை வாழ்த்தினர்.

அனைவரையும் ஓம்சக்தி சேகர் -தமிழ்செல்வி, நரேந்திரன் - தேன்மொழி ஆகியோர் வரவேற்றனர். ஏற்பாடுகளை ஓம்சக்தி தமிழ்செங்கோலன், கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement