டிரைவர் தற்கொலை

புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக, டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் சரண்ராஜ், 36; டிரைவர். சொந்தமாக லோடு கேரியர் வாகனம் ஓட்டி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி சத்யா கோபித்து கொண்டு, தாய் வீடான திண்டிவனத்திற்கு சென்றார்.

இந்நிலையில், சரண்ராஜிக்கு அவரது உறவினர்கள் போன் செய்தபோது, அவர் எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி வீட்டுக்கு சென்று பார்தார். வீட்டில் உடல் அழுகிய நிலையில் துாக்கில் தொங்கினார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement