சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,

2026 தேர்தலை முன்னிட்டு கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு தி.மு.க., வின் 'பென்' அமைப்பு தொகுதி வாரியான சர்வேயில் ஈடுபட்டு வருகிறது.
2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை, வியூகம் அமைத்தல் என கள ஆய்வுகளில் 'ஐபேக்' நிறுவனம் ஈடுபட்டது. வெற்றியும் கிடைத்தது. அதை பின்பற்றி லோக்சபா தேர்தலின் போது தி.மு.க.,வே 'பென்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. அதன் மூலம் தேர்தல் வியூகம், விளம்பரம் செய்து வருகிறது.
2026 தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தி.மு.க., 'பென்' அமைப்பின் வாயிலாக தொகுதி வாரியாக சர்வே பணிகளை தொடங்கியுள்ளது. 234 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., வின் பலம், பலவீனம், எதிர்க்கட்சிகளின் பலம், பலவீனம், தொகுதி எம்.எல்.ஏ., வின் செல்வாக்கு, ஆட்சி மீதான அதிருப்தி, எந்த ஜாதியினர் அதிகம், போன்றவை பற்றி ஆய்வு நடத்துகின்றனர். இந்த சர்வே குறித்து தி.மு.க., உள்ளூர் நிர்வாகிகள் எவருக்கும் தெரிவிக்கவில்லை.
கட்சியினர் கூறுகையில், 'ஆய்வு நடப்பது தெரியும். ஆனால் கட்சியினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் பதவிகள் நீட்டிப்பு, பறிப்பு, மாற்றம் இருக்கலாம், என்றனர்.
- நமது நிருபர் -

மேலும்
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை