ஜி.கே.என்.எம்.,வெளியிட்ட பொன்விழா சிறப்பு மலர்

கோவை : ஜி.கே.என்.எம்., மருத்துவமனை இருதயவியல் துறையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. அதில், பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது

பெங்களூரு இருதயநோய் நிபுணர் மஞ்சுநாத், இருதயவியல் துறையின் 50 ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் பொன்விழா ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, பொன்விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கா மவுண்ட் சினாய் மருத்துவமனையின் இருதயவியல் இயக்குநர் டாக்டர் சமின் சர்மா, ஆஸ்திரேலியா ராயல் பெர்த் மருத்துவமனையின் இருதயவியல் துறைத்தலைவர் டாக்டர் கிரஹாம் ஹில்லிஸ் ஆகியோர், இருதவியல் துறையின் தற்போதைய வளர்ச்சிகள், சவால்கள், தொழில்நுட்ப மேம்பாடு பற்றி பேசினர்.

இருதய மருத்துவதுறையில், சிறப்பான பங்களிப்பு வழங்கிய டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்டர் கிரஹாம் ஹில்லிஸ் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தனர்.

ஜி.கே.என்.எம்., தலைவர் ரகுபதி வேலுசாமி, இருதயவியல் துறைத்தலைவர் டாக்டர் சாம்பசிவம், மருத்துவ ஆலோசகர் பிவின் வில்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement