தோட்டத்து வீடுகளில் கொலை: ஏ.டி.ஜி.பி., ஆய்வு
காங்கயம்; பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, 2020 மற்றும் 2021ல் காங்கயம், மருதுறையில் மூதாட்டியும், சாவடிபாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியும் காலை செய்யப்பட்டனர். இதுவரை வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
சமீபத்தில், ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியை கொன்று 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்நிலையில், சிவகிரி, காங்கயம், அவிநாசிபாளையம் என, கொலைகள் நடந்த இடங்களில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், தனிப்படையினர் உடன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
வழக்கின் தற்போதைய விசாரணை நிலை, தோட்டத்து வீடுகளை கண்காணிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'