இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் கட்டுமான அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். கட்டட பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தாயுமானவன், மண்டலத் தலைவர்கள் வேணுகோபால், சிவக்குமார் கண்டன உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் பொன்னிவளவன், பாலமுரளிதரன், சசிக்குமார், சுரேஷ்குமார், குமார், முத்துசாமி. சபரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எம்.சாண்ட், பி.சாண்ட், கருங்கல் ஜல்லி விலைகளை அரசு குறைக்க வேண்டும். அரசு தரமான கல்குவாரி பொருள்களை நியாயமான விலைக்கு விற்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களை அத்திவாசிய பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
Advertisement
Advertisement