வைகாசி விசாக தேர்த்திருவிழா; திருத்தேர் அலங்கார பணி தீவிரம்

திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருப்பூரில் தேர்களில் அலங்கார கட்டுமானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, ஜூன், 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. வரும், 2ம் தேதி கிராம சாந்தி, 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. வரும், ஜூன், 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து, 9ல் விஸ்வேஸ்வரர் தேரோட்டமும், 10ம் தேதி வீரராகவர் தேரோட்டமும் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்களுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, தேர் சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில் தேர்களுக்கு, தேர் மிராசு குழுவினர், சாரம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். சாரம் அமைக்கும் பணி நிறைவு பெற்று, ஜூன், 5ம் தேதி தேர்களுக்கு கலசம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, தேர் அலங்கார பணிகள் துவங்கும். மண்டபக் கட்டளை மற்றும் தேர்த்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், 15ம் தேதி மாலை, 5:00 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடக்கவுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் வனராஜா தெரிவித்தார்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!