சைக்கிளில் சென்ற முதியவர் பலி

ஊத்துக்குளி; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 64. இவர் கடந்த 6 ம் தேதி இரவு ஊத்துக்குளி ஆர்.எஸ்., - படியூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement