வள்ளலார் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 421 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

உயிரியல் பாடப்பிரிவு மாணவி தீபா 600க்கு 597 மதிப்பெண்களும். கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர் கவிப்பிரியன் 597 மதிப்பெண் பெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.

மாணவிகள் தர்ஷினி, நர்மதா, மாணவர் வசந்த் 596 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். 590க்கு மேல் 2 பேர், 580க்கு மேல் 73 பேர், 570க்கு மேல் 127 பேர், 560க்கு மேல் 175, ,550க்கு மேல் 257 பேர் மதிப்பெண் பெற்றனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தீபா, மாணவர் கவிப்பிரியன் ஆகியோருக்கு பணமாலை அணிவிக்கப்பட்டது. நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் சாரங்கபாணி, வள்ளலார் கல்வி அறக்கட்டளை முன்னாள் தலைவர் திருமால்வளவன், வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுப்ரமணியன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை செயலாளர் ராஜா, பொருளாளர் செந்தில்குமார்,

வள்ளலார் கல்வியில் கல்லுாரி தாளாளர் ஜனார்த்தனன், தாளாளர்கள் வள்ளலார் கிட்ஸ் சக்கரவர்த்தி, வள்ளலார் பப்ளிக் பள்ளி செல்வராஜ், இயக்குனர்கள் நடராஜன், கண்ணன், மணிவாசகம், திருவேங்கடம், ராஜேந்திரன், சரவணன், சரோஜா, காண்டீபராஜன் உடனிருந்தனர்.

Advertisement