மாநகர ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் 'டிரான்ஸ்பர்'

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேற்கு மண்டல போலீசில் காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நல்லுார் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ரஞ்சித், மாநகர கட்டுப்பாட்டு அறைக்கும், கார்த்திகேயன், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவுக்கும், ரோஸ்லின் சேவியோ, மாநகர சைபர் கிரைம், ராஜேஸ்வரி, சென்ட்ரல் குற்றப்பிரிவு, நல்லுார் பாலமுருகன், வீரபாண்டி குற்றப்பிரிவு, சைபர் கிரைம் சொர்ணவள்ளி, சென்ட்ரல் சட்டம்-ஒழுங்கு, சைபர் கிரைம் லேப் கிருஷ்ணவேணி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, அங்கிருந்த பிரபாதேவி, கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

Advertisement