அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு எப்போது?

பல்லடம்; அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என, பல்லடம் அருகே, வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, திருவள்ளுவர் நகரில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் கட்டப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது என, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
திருவள்ளுவர் நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், அடிப்படை வசதிகள் பின்தங்கியே உள்ளன. இதற்காக, பொதுமக்களாகிய நாங்களே, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம். அவ்வகையில், இப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, இப்பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது. குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்து விட்டால், சிரமம் இன்றி வேலைக்குச் செல்ல முடியும் என்பதால், எப்போது அங்கன்வாடி மையம் திறப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம். உடனடியாக அங்கன்வாடி மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு