வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்
கம்பம் ; கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ புகையிலை மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்பம் வாரச்சந்தை அருகே இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிடுத்தனர். அப்போது உத்தமபாளையத்திலிருந்து கம்பம் நோக்கி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்.
டூவீலரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மீரா மைதீன் 45, வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது 184 கிலோ புகையிலை பொருள்கள் இருந்ததடை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.37 லட்சம்.கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்து மீரா மைதீனையும் கைது செய்தனர். கம்பம் வடக்கு எஸ்.ஐ அரசு விசாரிக்கின்றார்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!