மிகக்குறைந்த செலவில் உருவான பார்கவஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

11

கோபல்பூர்: மிகக்குறைந்த செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பார்கவஸ்த்ரா எனும் ஏவுகணை, வெற்றிகரமாக ட்ரோன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இது இந்தியாவின் அடுத்த மைல்கல்லாகும்.


ஒடிசாவின் கோபல்பூரில் நேற்று நிகழ்த்தப்பட்ட பரிசோதனையின் போது, இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. தாக்கி அழிக்கும் முறையில் வடிவமைக்கப்பட்ட பார்கவஸ்த்ரா, 2.5 கிமீ தொலைவில் உள்ள சிறிய மற்றும் உள்வரும் ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் மேம்படுத்தப்பட்ட திறனைக் கொண்டுள்ளது.


எஸ்.டி.எ.எல்., உருவாக்கிய இந்த ஏவுகணையின் பரிசோதனையானது, வான் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் 3 முறை நடத்தப்பட்டது. 3 முறையும் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.


ரேடார் போன்ற சென்சார்களாகவும், தேவைப்பட்டால் தாக்குதல் ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பார்கவஸ்த்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் புதிய மைல்கல்லாகும்.
.

Advertisement