நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது

12

புதுடில்லி: உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: உ.பி.,யின் ஜீவர் பகுதியில் ரூ.3,706 கோடி செலவில் 6வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 5 செமி கண்டக்டர் தொழிற்சாலை கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.(இவை அசாம், குஜராத்தில் அமைகிறது) .


அதில், ஒரு தொழிற்சாலையில் இந்தாண்டே உற்பத்தி துவங்கும். 6வது தொழிற்சாலை HCL - FIXCONN இணைந்து அமைக்கின்றன. இந்த தொழிற்சாலையில் மொபைல்போன், லேப்டாப்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான 'டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள்' தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027 ம் ஆண்டு செயல்பட துவங்கும். ஆண்டுக்கு 3.6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement