காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; குழந்தைகள் உட்பட 65 பேர் பலி

3

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், "போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது. ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம். வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.


இந்நிலையில் காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் 22 பேர் உள்பட 65 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement