'பிளையிங் ப்ளீ சி6' இ.வி., சத்தம் வராத என்பீல்டு பைக்

'ராயல் என்பீல்டு' நிறுவனம், 'பிளையிங் ப்ளீ சி6' என்ற அதன் முதல் மின்சார பைக்கை காட்சிப்படுத்தி உள்ளது. 'பிளையிங் ப்ளீ' என்பது என்பீல்டு நிறுவனத்தின் புதிய மின்சார பைக் பிராண்டாகும்.
இந்த 'சி6' பைக் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஸி படைகளுக்கு ஏதிராக, பிரிட்டன் ராணுவம் பயன்படுத்திய 'பிளையிங் ப்ளீ' என்ற பைக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது, 125 சி.சி., இன்ஜினில் வந்த அந்த பைக், தற்போது மின்சார பைக்காக அறிமுகமாக உள்ளது.
பேட்டரி மற்றும் மோட்டார் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த பைக்கின் ரேஞ்ச், 150 கி.மீ., வரை செல்லும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. குறைந்த எடை, நல்ல பிக்கப், சிறப்பான ஓட்டுநர் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் எடை, 100 கிலோவாக உள்ளது. இதற்கு, பைக்கின் வெளிப்புற 'போர்ஜ்டு அலுமினியம்' பிரேம், 'மெக்னீசியம்' உலோகத்தால் ஆன பேட்டரி பேக் வெளிப்புறம் ஆகியவை பைக்கின் எடையை குறைவாக வைக்க முக்கிய காரணம்.
'டி.எப்.டி.,' டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக் ஷ்ன் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் என்பீல்டு பைக்கில் முதல் முறையாக வழங்கப்படுகிறது. பழைய பிளையிங் ப்ளீ பைக்கின் விசேஷ முன்புற 'கிர்டர்' போர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றன.
அத்துடன், 19 அங்குல முன்புற மற்றும் பின்புற அலாய் சக்கரங்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்ட இதர அம்சங்களும் இதில் உள்ளன.
ரேஞ்ச் 150 கி.மீ.,
எடை - 100 கிலோ
மேலும்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்