'அப்டேட்டட்' ஹீரோ 'ஹெச்.எப்., - 100'

'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், அதன் 'ஹெச்.எப்., - 100' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, 1,100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள, 97.2 சி.சி., இன்ஜின் 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு மேம் படுத்தப்பட்டுள்ளது. இது, 'ஸ்பெலண்டர்' மற்றும் 'பேஷன் பிளஸ்' பைக்குகளில் உள்ள அதே இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன், 4 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலை, 60,118 ரூபாயாக உள்ளது.

Advertisement