எம்.ஜி., வின்சர் 'இ.வி., புரோ' 'எக்ஸ்ட்ரா' ரேஞ்ச், 'ஸ்மார்ட்' பாதுகாப்பு

'எம்.ஜி.,' நிறுவனம், அதன் 'வின்சர்' மின்சார காரின், 'இ.வி., புரோ' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முதல் 8,000 பேருக்கு மட்டும், 17.49 லட்சம் ரூபாய் அறிமுக விலையில் கிடைக்கிறது.

இம்முறை இந்த காரின் ரேஞ்ச் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மாடல் வின்சர் காரில் 38 கி.வாட்.ஹார்., பேட்டரி உள்ள நிலையில், இந்த இ.வி., புரோ மாடல் காருக்கு 52.9 கி.வாட்.ஹார்., பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இதன் ரேஞ்ச் 449 கி.மீ.,ராக உயர்ந்துள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய, 9.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 50 நிமிடம் எடுத்துக்கொள்கிறது.

வெளிப்புற மற்றும் உட்புற டிசைன், இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. உட்புற நிறம், 18 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பை அதிகரிக்க, அடாஸ் லெவல் 2 வசதி வழங்கப்பட்டுள்ளது. இதர மின்சார உபகரணங்களை சார்ஜ் செய்வது, இதர மின்சார கார்களை சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பேட்டரி ஆற்றல் அதிகரிக்கப்பட்டதால், பூட் ஸ்பேஸ் 25 லிட்டர் குறைவாக, 579 லிட்டரில் உள்ளது.

விலை: ரூ.17.49 லட்சம், பேட்டரி வாடகை முறை ரூ. 12.49 லட்சம்




விபரக்குறிப்பு



பேட்டரி- 52.9 கி.வாட்.

ஹார்.,பவர் - 136 ஹெச்.பி.,

டார்க் - 200 என்.எம்.,

ரேஞ்ச் - 449 கி.மீ.,

பூட் ஸ்பேஸ் - 579 லிட்டர்


டீலர்: FPL-MG MOTORS - 93840 92370

Advertisement