ஆகமம் அல்லாத கோவில் : 3 மாதத்தில் அடையாளம் காண சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி: ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ள சுப்ரீம் கோர்ட், ஆகமம் அல்லாத கோவில்கள், ஆகமக் கோவில்கள் குறித்து கணக்கெடுக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு உள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: 2,500க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதை நிரப்புவதற்கு, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விதித்த தடையை நீக்க வேண்டும். சட்டவிதிகளின்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படும். அர்ச்சகர்கள், நிர்வாகிகளை நியமனம் செய்ய அரசு தயாராக உள்ளது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் தமிழகத்தில் குறைந்தளவில் உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆகமக் கோவில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோவில்களை 3 மாதங்களுக்குள் சென்னை ஐகோர்ட் அமைத்த குழு அடையாளம் காண வேண்டும். ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பலாம் என உத்தரவிட்டு உள்ளது.










மேலும்
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு