முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் தெருக்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர்.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்துார் அருகே காக்கூர், கருமல், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

முதுகுளத்துார் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் மக்கள் நடப்பதற்கு சிரமப்பட்டனர்.

இதேபோன்று கமுதி, அபிராமம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது.

Advertisement