டாக்டர் கார் மீது கல்வீச்சு

தேவதானப்பட்டி: பெரியகுளம் தென்கரை தெற்குப்புதுத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் 35. இவர் பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா மகன் டாக்டர் முத்துக்குகனின் கார் டிரைவர்.

பெரியகுளத்திலிருந்து மதுரைக்கு முத்துக்குகன் காரில் அவரது குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.

வேல்நகர் பாலம் அருகே ஆட்டோவில் சென்ற இருவர், கார் மீது கல் வீசினர்.

இதில் கார் முன்பக்கம் சேதமடைந்தது. லட்சுமணன் தட்டி கேட்டதற்கு அவரை மர்மநபர்கள் மிரட்டி விட்டு ஆட்டோவில் சென்றனர். லட்சுமணன் புகாரில், தேவதானப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தெற்குதெருவைச் சேர்ந்த பிரசாந்தை 35. கைது செய்தார். மற்றொருவரை தேடி வருகிறார்.

Advertisement