மல்லி யஷஸ் இங்கிலீஷ் பள்ளி ஐ.சி.எஸ்.இ., தேர்வில் சாதனை
ஸ்ரீவில்லிபுத்துார்; மல்லி யஷஸ் இங்கிலீஷ்பள்ளி மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ. தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி செயலாளர் உஷா ரமேஷ் கூறியதாவது:
எங்கள் பள்ளி 2016ல் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது இந்த ஆண்டு முதல் முறையாக ஐ.சி. எஸ்.இ.தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 80 சதவீத மார்க்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்கள்.
வரும் கல்வியாண்டில் 11ம் வகுப்பு துவக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் குரூப் தேர்வு செய்யும் போது, தங்களுக்கு விருப்பமான பாடத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்தை பொதுவாகவும் மேலும் 4 பாடங்களை விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
இதன்படி அறிவியல் குரூப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் ஆர்ட்ஸ் குரூப்பில் இருந்து ஒரு பாடத்தையும், ஆர்ட்ஸ் குரூப் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் அறிவியல் குரூப்பில் இருந்து ஒரு பாடத்தையும் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
தங்களுக்கு பிடித்தமானஎளிதான பாடத்திட்டங்களில் சேர்ந்து மாணவர்கள் பயனடையலாம், என்றார்.