துணைவேந்தர் தேடுதல் குழுவில் 'கவர்னர்' நீக்கம்
சென்னை:பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், 'கவர்னர் - வேந்தர்' என்ற சொல் நீக்கப்பட்ட சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணா பல்கலை துணை வேந்தரை பரிந்துரைப்பதற்கான மூவர் அடங்கிய தேடுதல் குழுவில், அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஏற்கனவே பல்கலை சட்டத்தின்படி இடம்பெற்ற, 'வேந்தரான கவர்னர்' என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், வேந்தரின் பிரதிநிதி அல்லது ஒருங்கிணைப்பாளர் என்ற சொல்லுக்கு பதிலாக, வேந்தரின் பிரதிநிதி அல்லது உறுப்பினர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 'கவர்னர் - வேந்தர்' என்ற சொல் நீக்கப்பட்டு, 'அரசு' என, மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளின் துணை வேந்தர் தேடுதல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement