முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி
கோவை:கோவை, கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 36; சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், 'டீம் லீடர்'.
இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த, ஏப்., மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூருவில் செயல்பட்டு வரும், 'பிலிப் சைடு குளோபல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் கூறினார்.
இதை நம்பிய புவனேஸ்வரன், மோசடி நபர் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 16 தவணைகளாக ரூ. 21.17 லட்சம் அனுப்பினார். இதன் பின், லாப பணத்தை கேட்டபோது, அந்த நபர், புவனேஸ்வரனை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். புவனேஸ்வரன் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புவனேஸ்வரன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு