கத்தியை காட்டி மக்களை அச்சுறுத்திய ரவுடிகள் கைது

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, சத்யா நகர் 3வது தெருவில், இருவர் கத்தியுடன் வலம் வந்து, பொதுமக்களை அச்சுறுத்துவதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்திய எம்.கே.பி.நகர் காவல் நிலைய பழைய குற்றவாளியான, வியாசர்பாடியைச் சேர்ந்த வெங்கையன், 28, சரண், 23, ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல, வியாசர்பாடி, பி.வி.காலனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் சுற்றித்திரிந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார், 42, ஜோதீஸ்வரன், 32, செங்கல்பட்டு பிரகாஷ், 25, உள்ளிட்ட மூவரை பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement