வேல் பூஜை வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து முன்னணி சார்பில் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி அடையவும், அவர்கள் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைந்திட வேண்டி வேல் பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.

ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். பின் வேலுக்கு ஏராளமான பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணதுரை, மாநில பொறுப்பாளர் சோலையப்பன், ஹிந்து முன்னணி மாவட்ட பொருளாளர் வினோத் குமரன், மாவட்ட பொறுப்பாளர் பாண்டியராஜ், நகர செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement