கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கோயில்களில் விண்ணப்பம் பெறப்பட்டும் இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்கள், திருமடங்கள், திருமடங்களுடன் இணையாத கோயில்கள், அறக்கட்டளைகள், சமணத் திருக்கோயில்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் செயல்பட்டு வருகிறது.
இவற்றில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன், பழனி முருகன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. அதிகபட்சம் 500 கோயில்களுக்குள் மட்டுமே அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
தி.மு.க. ஆட்சி ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், தங்களுக்கு அறங்காவலர் பதவி கிடைக்குமா என கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும்
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி