ஐம்பொன் சிலை கடத்த முயற்சி துாத்துக்குடியில் 4 பேர் கைது

திருநெல்வேலி:துாத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை கடத்த முயற்சித்த நான்கு பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் துாத்துக்குடியில் ரோந்து சென்றபோது, பல கோடி ரூபாய் மதிப்புடைய பழங்கால ஐம்பொன் அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.

அவர்களை இன்று மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்துகின்றனர்.

Advertisement