கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு

உத்தரகன்னடா:கப்பலில் கார்வாருக்கு வந்த பாகிஸ்தான் நபர், இந்திய மண்ணில் கால் வைக்கவிடாமல் கடலோர காவல் படை அதிகாரிகள் தடுத்தனர்.
காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பின், மத்திய அரசு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை நம் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. அவர்களின் விசாவையும் ரத்து செய்தது. எனவே ஆயிரக்கணக்கானோர் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில், உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் துறைமுகத்துக்கு, 12ம் தேதியன்று சரக்கு கப்பல் ஒன்று ஈராக்கில் இருந்து வந்தது. 'எம்.டி.ஆர்., ஓஷியன்' என்ற பெயர் கொண்ட அந்த கப்பலில் இருந்த தொழிலாளர்களில் 15 இந்தியர்கள், இரண்டு சிரியா நாட்டவர்களுடன், பாகிஸ்தான் நபர் ஒருவரும் இருந்தார்.
இதையறிந்த துறைமுக அதிகாரிகள், கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக துறைமுகத்துக்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், பாகிஸ்தான் நபரை கப்பலில் இருந்து இறங்க விடாமல் தடுத்தனர். அவரது மொபைல் போன் மற்றும் ஆவணங்களை, கப்பலின் கேப்டன் மூலமாக பறிமுதல் செய்தனர்.
இரண்டு நாட்களாக அவர், கப்பலிலேயே இருந்தார். இந்திய மண்ணில் கால் வைக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சரக்கை இறக்கிய பின், கப்பல் நேற்று காலை கார்வாரில் இருந்து, சார்ஜாவுக்கு புறப்பட்டது. அதே கப்பலில் பாகிஸ்தான் நபரை, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்