சைக்கிள் திருடும்போது சுற்றிவளைத்த மக்கள்

காரிப்பட்டி, சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல், 60. இவரது சைக்கிளை, நேற்று மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். மக்கள், அவரை பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் வாழப்பாடி அடுத்த, நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்த சின்ன ராஜா, 37, என்பதும், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த கணபதி, 51, வீட்டில், நேற்று முன்தினம் இரவு, மொபைல் போன் திருடியதும் தெரிந்தது. காரிப்பட்டி போலீசார், சின்ன ராஜாவை கைது செய்து, மொபைல் போனை மீட்டனர். சின்னராஜா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

Advertisement