வெயிலால் மீன்வரத்து குறைவு பாம்பன் மீனவர்கள் ஓய்வு

ராமேஸ்வரம்:கோடை வெயில் சுட்டெரிப்பதால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில், மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் ஓய்வெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிப்பதால், மே மாதம் பாக் ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் நீரோட்டம், தட்பவெப்ப நிலை மாறுபடும்.

இதனால், மீன்கள் இடம்பெயர்கின்றன. இக்கால கட்டத்தில், மீன்கள் இனப்பெருக்கம் நடக்கிறது. இந்நிலையில், சில நாட்களாக பாம்பனில் இருந்து நாட்டுப்படகில், பாக்ஜலசந்தி கடலில், மீன்பிடித்த மீனவர்கள் வலையில், எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

இதனால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால், நேற்று காலை பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தனர்.

Advertisement