வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி

வாழப்பாடி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலில், கடந்த, 8ல் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் முரளி நாயக், வீர மரணம் அடைந்தார். இதனால் சேலம் மவாட்டம் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், சார்ப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், தலைவர் குபேந்திரன் தலைமையில் ஏராளமானோர்,


நேற்று, முரளி நாயக் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீர மரணம் அடைந்த, மேலும் சில ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் எம்கோ, பயிற்சியாளர் அலெக்ஸ், முன்னாள் ராணுவ வீரர் காசி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement