சென்னையில் 5.41 ஏக்கர் வாங்கிய பிரிகேட்

சென்னை:கட்டுமான நிறுவனமான பிரிகேட் என்டர்பிரைசஸ், சென்னையில் 442 கோடி ரூபாய் மதிப்பில் 5.41 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

சென்னை வேளச்சேரி சாலையில், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி அருகே உள்ள 5.41 ஏக்கர் நிலத்தை, பிரிகேட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

அங்கு மொத்த வளர்ச்சி மதிப்பில், 1,600 கோடி ரூபாய்க்கு கட்டுமான திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

சென்னையின் கட்டுமான சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் வளர்ந்து வரும் இந்நிறுவனம், வேளச்சேரியில் வாங்கியுள்ள இடத்தில் 8 லட்சம் சதுர அடி பரப்புக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது.

Advertisement