புதுச்சேரி வீரர்கள் டாமன் டையூ பயணம்

புதுச்சேரி: டாமன் டையூவில் நடைபெறும் தேசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழா வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை டாமன் டையூவில் நடைபெறுகிறது. இதில் பீச் வாலிபால், பென்கா சிலாட் மற்றும் செபக் டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான தேர்வு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. அதில், பீச் வாலிபால் போட்டிக்கு ஆண், பெண் இரு அணிகளுக்கும் தலா 4 பேரும், பென்கா சிலாட் போட்டியில் 3 பெண்களும், செபக் டக்ரா போட்டிக்கு 3 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 14 பேரும், பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாளர் ஆகியோருடன் நாளை புதுச்சேரியில் இருந்து டாமன் டையூவிற்கு புறப்படுகின்றனர்.

Advertisement