நீர்மோர் பந்தல் திறப்பு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தலை எதிர்க்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்தார்.

கதிர்காமம் தொகுதி தி.மு.க., செயலாளர் வடிவேல் தலைமையில் இசைமணி முன்னிலையில் நீர் மோர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் கென்னடி, செந்தில்குமார், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், கதிர்காமம் தொகுதி அவைத் தலைவர் கண்ணபிரான், பொதுக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் தமிழ்வாணன், சோனியா காந்தி நகர் இப்ராஹிம், சிவமுருகன், அன்பு, அண்ணா வீதியை சேர்ந்த ரமேஷ், சிவக்குமார், கலைச்செல்வன், சத்தியநாராயணன், சீனு, நசீர், சிவராஜ் மற்றும் மார்க் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement