ஓட்டல் உணவு விஷத் தன்மையால் சிறுவன் இறப்பு: ஆய்வில் உறுதி
மூணாறு:மூணாறு சுற்றுலா வந்து திரும்பிய சிறுவன் ஓட்டல் உணவில் ஏற்பட்ட விஷத்தன்மை மூலம் இறந்ததாக ஆய்வில் தெரியவந்தது.
பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் அருகே சூரக்குழா பகுதியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர் தனது சகோதரரின் இருமகன்களையும் அழைத்து வந்தார். அவர்கள் மூணாறில் சுற்றுலாவை முடித்து விட்டு மே 9ல் சொந்த ஊர் திரும்பினர். வழியில் சகோதரரின் 9 வயது மகனுக்கு திடிரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்கை பெற்று பயணத்தை தொடர்ந்த போது நேரியமங்கலம் பகுதியில் சிறுவனின் உடல்நிலை மோசமானது. கோதமங்கலத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்ததாக தெரிவித்தனர். மேலும் இரு சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர். உணவு ஒவ்வாமை மூலம் சிறுவர்கள் பதிக்கப்பட்டதாக தெரியந்தது.
சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் மூணாறு, வட்டவடை, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் ஓட்டல்களின் உணவு சாப்பிட்டது தெரியவந்தது. அதன்படி மூணாறில் காலனி ரோட்டில் உள்ள ஓட்டலில் மே 10ல் சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை, போலீசார் சோதனையிட்டு ஓட்டலை மூடினர். அதேபோல் வட்டவடை, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு மண்டல தடயவியல் ஆய்வகத்தில் சிறுவனின் உடல் உள் உறுப்புகளை ஆய்வு செய்தபோது உணவில் விஷத் தன்மை ஏற்பட்டு சிறுவன் இறந்ததாக தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மூணாறு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் எந்த ஓட்டல் உணவில் விஷத் தன்மை ஏற்பட்டது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மூணாறில் பூட்டப்பட்ட ஓட்டல் இரு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு